சனி, 18 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழா 2014 ...சில குறிப்புகள் ..
 

1. அவுங்க அவுங்க புத்தகங்களை அவுங்கவுங்களே
   கூவிக் கூவி (முக நூல்) விளம்பரம் செய்யும் அருமையான வாய்ப்பு.
2 . படைப்பாளிகளும் -வாசகர்களும்  என வாங்கியவர்களே திரும்பத் திரும்ப    

     புத்தகங்களை வாங்கிக்கொண்டிருக்கும் நிலை கொஞ்சம் மாற
     வரும்  பார்வையாளர்களும்  பொதுமக்களும்  கட்டாயம் ஆளுக்கு ஒரு   

        நூலாவது வாங்குவது என சபதம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
3. சமையல் ,சோதிடம் , வாஸ்து , கோலம் போடுவது எப்படி ..?
    15 நாளில் எதையும் சாதிக்கலாம்...,மீன் பிடிப்பது எப்படி ..?
     சாப்பிடுவது எப்படி.. ?  போன்ற புத்தகங்களிலிருந்து கொஞ்சம் விடு பட்டு
    நல்ல இலக்கியங்களை படிக்க ஒரு சில புத்தகங்களையாவது
   வாங்க முயற்சி செய்ய வேண்டும் மக்கள் .

4. சுற்றுச்சூழல் இயற்கை காட்டுயிர்கள் சார்ந்து தமிழிலும்
   மற்றும் மொழிப் பெயர்ப்புகளும் நிறைய வரத் துவங்கியுள்ளது
  மிகுந்த சந்தோஷத்தை தருகிறது . சாலை விரிவாக்கம் ,என்ற பெயரிலும் ,    ரியல் எஸ்டேட் வியாபாரிகளினாலும் சுற்றுச்சூழல் மிக நாசமாகிறது . இந்த சூழலில் கட்டாயம் இந்த நூல்களை வாசகர்கள் மட்டுமல்ல பொது மக்களும் வாசிக்க வேண்டும் .

சுற்றுச்சூழல் நூல்கள் சில.

முதல் 5 நூல்கள் தியடோர் பாஸ்கரன் எழுதியவை

1. மழைக்காலமும் குயிலோசையும் - காலச்சுவடு

2. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - உயிர்மை

3. தாமரை பூத்த தடாகம் - உயிர்மை

4. கானுறை வேங்கை - காலச்சுவடு (மொழிபெயர்ப்பு)

5. வானில் பறக்கும் புள்ளெலாம் - உயிர்மை

6. நீராதிபத்தியம் - எதிர் வெளியீடு

7. திருடப்பட்ட தேசம் பூவுலகின் நண்பர்கள் - எதிர் வெளியீடு

8 . ஒற்றை வைக்கோல் புரட்சி - ஜப்பானிய இயற்கை வேளாண்
அறிஞர் . மசனாபு ஃபுகோகா

9 . சூழலியல் புரட்சி - விடியல் பதிப்பகம்

10. அதோ அந்த பறவை போல - முகமது அலி- தடாகம் வெளியீடு

11 . பறவைகள் அறிமுகக்கையேடு - க்ரியா பதிப்பகம்

12. திணையியல் கோட்பாடுகள் - பாமயன்- தாடகம் பதிப்பகம்


புத்தக கண்காட்சியை ஒட்டி" பபாசி "- சார்பாக ஆண்டு தோறும் நாவல் போட்டி ஒன்று வைத்து சிறந்த மூன்று நாவல்களை தேர்ந்தெடுத்து ,
சென்னை புத்தகண்காட்சியில் அதை வெளியிட்டு
துவக்க நாளில் பரிசு வழங்கும் முறையை கொண்டுவர வேண்டும் .


ரொம்ப நாளுக்குப்பிறகு எங்க ஊரு அத்துமுனா இன்று என்னைப் பார்க்க வந்தான் . கையில் பெரிய பைண்ட் நோட்டு வச்சுருந்தான்.
"என்னடா ..அது ..?" என்றேன் .
"சொல்றே ...ஒரு கதைக்கு எவ்வளவு பணம் தருவாங்க ..?" என்று கேட்டு என்னை திடுக்கிட வைத்தான் .
என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை ......என்கிற ரீதியில்
அத்துமுனா வுக்கும் ,கதைக்கும் என்ன சம்பந்தம் ......இவனுக்குள் இப்படி ஒரு ...........எப்படி ..? குழப்பம் தீராமல் அவனையே
பார்த்துக்கொண்டிருந்தேன் -வியப்புடன் .
" எண்ணனே ....பதில் சொல்லாம இப்டி
பாக்குறீங்க ..?"என்றான் .
" பணமெல்லாம் தரமாட்டாங்க . நாமதான் பணம்குடுக்கணும் " என்றேன் .
" நாம கதை எழுதுறதுக்கு அவிய்ங்க தானே பணம்
தரணும் ?"
" வாஸ்தவம்தான் ...ஆனா தரமட்டாங்க....அதுமட்டுமல்ல ,
ஒவ்வொரு பதிப்பகமா சென்று என் நாவலை போடுவீங்களானு கெஞ்சணும் .."
" அப்புறம் எண்ணே டைத்த வேஸ்ட் பண்ணி
எழுதுறீங்க ..?" கேட்டானே ஒரு சூப்பர் கேள்வி .
" ஆமா இப்ப எதுக்கு நீ இதெல்லாம் கேக்குறே ..?"
" நானும் ஒரு கத எழுதியிருகேண்ணே......." என்று அந்த பைண்ட் நோட்டைக் காட்டி விட்டு ,"அப்ப இதுக்கு பணம் தரமாட்டாங்களா.. ?"
ஆதங்கப்பட்டு நடையைக் கட்டினான் அத்துமுனா.....


(ராயல்டி பிரச்சனை இப்போது பரபரப்பாக இருக்கிறது ....)
பெரும்பாலும் புதிய அல்லது பிரபலமில்லாதவர்களின் முதல் படைப்பை வெளியிடும்போது பதிப்பகங்கள் அந்த படைப்பாளியிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன . பொதுவான நடை முறை இது .
இங்கு படைப்பாளனும் தன் படைப்பு வெளிவந்தால் போதும் என்கிற மனநிலையில்தான் இருக்கிறான். பணம் ஒரு பொருட்டாக இருப்பதில்லை அவனுக்கு . இதை பதிப்பகங்கள் சாதகமாக பயன் படுத்திக்கொள்கின்றன . இந்நிலை மாற வேண்டும் ...
நல்ல படைப்புடன் வரும் படைப்பாளியின் படைப்புகளை
பணம் பெறாமல் பதிப்பகங்கள் வெளியிடவேண்டும்-
வெளியிட முன் வரவேண்டும் .


# 300 முதல் 400 அரங்குகள் இருக்கும் போதும் 10 நாட்கள் இப்போது 700 அரங்குகளுக்கும் மேல் சென்னை புத்தகத் திரு விழா
விரிவடைந்து படைப்பாளிகள் -வாசகர்கள் - பார்வையாளர்கள்
என நாளும் மக்கள் திரளுகின்றனர்.
11 நாள் மட்டுமே என குறைந்த பட்ச கால அளவே இருப்பதால் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வர நினைப்பவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது .
இவ்வளவு பெரிய புத்தகத் திருவிழாவுக்கு இன்னும் என்ன 11 நாள் தான் நடத்துவது என்கிற கணக்கு...? எனவே வரும் ஆண்டிலிருந்து 20 நாட்கள் அல்லது குறைந்த பட்சம் 15 நாட்களாவது புத்தக கண்காட்சியை நடத்த பாபஸி ஆவண செய்ய வேண்டும் . பழைய  நூல்களை குறைந்த விலைக்கு வெளியே வைத்து  விற்க  அனுமதிக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக